PWD



மத்திய அரசின் மாற்றுத்திறானிகளுக்கான திட்டம்
      மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் மத்திய அரசின் மாற்றுத்திறானிகளுக்கான திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளி மாணவிகளது வாழ்க்கையில் ஒரு புதிய நம்பிக்கையினை ஏற்படுத்தவும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்காகவும், தொழில்நுட்பக்கல்வி பயிலகங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
      தமிழகத்தில் மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகளில் மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் இக்கல்லூரியும் ஒன்று ஆகும்.
மாற்றுத்திறானிகளுக்கான டிப்ளமோ படிப்புகள்
      மாற்றுத்திறனாளி மாணவிகள் பயன்பெறும் பொருட்டு இக்கல்லூரியில் நடத்தப்படும் முழுநேர வகுப்புகளான மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல், கருவியியல் மற்றும் கட்டுப்பாட்டுவியல் மற்றும் ஆடை வடிவமைப்பியல் மற்றும் நவீன அலுவலக நடைமுறை வணிகவியல்  மூன்றாண்டு படிப்புகளில் தகுதியுள்ள மாணவிகள் சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.
இத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவிகளுக்கு படிப்புக் காலங்களில் செலுத்தவேண்டிய கல்வி கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணம் ஆகியவை முழுதுமாக விலக்களிப்பதுடன் படிப்பதற்க்கு தேவையான விலையில்லா புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்கள் அளிக்கப்படுகிறது. மற்றும் மாதந்தோறும் ரூ250 வீதம் படிப்புதவித்தொகையினையும் மத்திய அரசு வழங்குகிறது.
மாற்றுத்திறானிகளுக்கான குறுகிய கால பயிற்சிகள்
படித்து வேலையில்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு தொடர்பான கணினி பயிற்சி, தையல் பயிற்சி, அழகு கலைப்பயிற்சி, தட்டச்சுப்பயிற்சி மற்றும் இயந்திர சித்திர பூத்தையல் பயிற்சி போன்ற குறுகிய கால தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதன்மூலம் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவிகளும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.
மாற்றுத்திறானிகளுக்கான வேலை வாய்ப்பு:
தொழிற்சாலைகள் மற்றும் பல நிறுவனங்களில் இந்த மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதற்காக இந்தப் பயிலகம் கோவை கொடிசியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது.
மாற்றுத்திறானிகளுக்கான திட்ட ஒருங்கிணைப்புக்குழு
திருமதி சு,பத்மினி, M.E., M.I.S.T.E, MISTEM.E
முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு கே.சண்முகசுந்தரம், M.Sc., D.B.M.,
துணை முதல்வர் மற்றும்  திட்ட முன்னோடி
திரு ப.தர்மராஜ், M.Sc.,
துறை ஒருங்கிணைப்பாளர்
திருமதி பி.வாசுகி, M.Sc.,
துறை ஒருங்கிணைப்பாளர்
முனைவர் க.தேவராஜன் Ph.d.,
துறை ஒருங்கிணைப்பாளர்
திருமதி சா.செல்வரத்தினம், M.E.,
துறை ஒருங்கிணைப்பாளர்
திருமதி கே,கிருஷ்ணவேணி
உதவிப்பணியாளர்




No comments:

Post a Comment